சேவை பற்றி எழுதுவதாக இருந்தால் ஆயிரக்கணக்கான பக்கங்களில் வாழ்நாள் முழுவதும் எழுதி கொண்டு இருக்கலாம்....
ஆம் !!!
உலகத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த ஒரு மிகப்பெரிய போராளி இவர்.
அர்ஜென்டினாவில் பிறந்து,கியூபாவில் ஒரு போராளியாக பிடல் காஸ்ட்ரோவின் தளபதியாக இருந்து பாடிஸ்டாவின் சர்வதிகார ஆட்சியில் இருந்து கியூபாவின் மக்களுக்கு விடுதலை வாங்கி தந்தவர் ,அந்த நாட்டில் பல பொறுப்புகளை வகித்தவர் நான் எந்த நாட்டையும் சேர்ந்தவன் அல்ல,எங்கு எல்லாம் மக்கள் அடிமை பட்டு இருக்கிறார்களோ அவை எல்லாம் என் தாய் நாடே என்று சொல்லி பொலிவிய மக்களின் விடுதலைக்காக போராடி இறுதியில் ஏகாதிபத்திய சக்திகளின் ஏவலால் கொலை செய்யப்பட்டவர்.....
இத்துடன் நிறுத்திவிடுவதால் இது தான் அவரது வாழ்க்கை வரலாறு என்று நினைத்து விட வேண்டாம்.முதலாளித்துவ சக்திகள் அவரை புதைத்திருக்கலாம் ஆனால் தனது புரட்சிமிகு சிந்தனைகளால் இன்றும் பல கோடி மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்....
ஆனால் இன்றும் உலகம் நேர்த்தியாக இல்லை, இந்த நிலை மாற வேண்டும்...
இன்றும் உலகமயமாக்கல் கொள்கைகளால் சாதாரண மக்கள் மிகுந்த பாதிப்படைகிறார்கள்.
நான் இதை எழுதுவதால் மட்டும் உலகத்தை மாற்றி விட முடியாது ,அது எனக்கு தெரியும் இருப்பினும் வெகு சிலரையாவது சிந்திக்க வைக்க வேண்டும் என்ற சிறிய ஆவல் தான்......
நான் இதை எழுதுவதால் மட்டும் உலகத்தை மாற்றி விட முடியாது ,அது எனக்கு தெரியும் இருப்பினும் வெகு சிலரையாவது சிந்திக்க வைக்க வேண்டும் என்ற சிறிய ஆவல் தான்......
சே சிந்தித்த மாற்றம் வேண்டும்....
இன்று கல்வி வியாபாரமாக்கப்பட்டு,வேலை கேள்வி குறியாக்கப்பட்டு ,வாழ்வாதாரங்கள் சிதைக்கப்படும் சுழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.....
ஒரு இந்தியனாக நண்பா நீ எதை சிந்திப்பாய் என நம்புகிறேன் ......
இதோடு முடிந்து விடவில்லை ....
உங்களில் ஒருவனாக நானும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன் ......
என் பயணமும் தொடரும் ..சேவின் மோட்டார் சைக்கிள் பயணங்களை போன்று ....