கடந்த ஆண்டில் நமது தேசம் கடந்து வந்த பாதை சற்று கடினமானது தான் இருப்பினும் பல அரிய மலர்களும் இப்பாதையில் மலர்ந்திருகின்றன.....
காமன்வெல்த் போட்டிகளை பல இடர்பாடுகளுக்கு மத்தியில் வெற்றிகரமாக நடத்தி இருக்கிறோம். ஆசிய விளையாட்டு போட்டிகளில் 6 வது இடத்தை பெற்று இருக்கிறோம்.
தமிழக இளைஞர் ர.உதயகுமார் இந்திய ரூபாய்க்கான குறியீடை வடிவமைத்து பெருமை சேர்த்திருக்கிறார்.
அமெரிக்க அதிபர், பிரான்ஸ் அதிபர், சீன அதிபர், ரஷ்ய அதிபர் என பல நாடுகளின் தலைவர்கள் வருகை தந்திருக்கிறார்கள்.
ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் என்ற பதவிக்காக நாம் காத்திருகிறோம். காலம்காலமாக நம் மக்களுக்கு காத்திருப்புகள் ஒன்றும் புதியதாக இல்லை.
வளர்ச்சியின் பாதையில் பயணித்து கொண்டிருக்கிறோம் என்று பல தலைவர்கள் சொல்லி கொண்டிருக்கிறார்கள். அவர்களது பார்வையில் சில பல பெரு முதலாளிகளின் வளர்ச்சி தான் ஒரு நாட்டின் வளர்ச்சி என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
பெட்ரோலிய பொருள்களின் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை பெரிய நிறுவனங்களிடம் அடகு வைத்து விட்டது நமது அரசு.
2010 ஆம் ஆண்டு ஊழல்களின் ஆண்டாகி போனது தான் இதில் எல்லாம் மிகப்பெரிய வேதனை அலைகற்றை ஒதுக்கீட்டில் ஊழல், காமன்வெல்த் போட்டிகளில் ஊழல், ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல் என மெகா ஊழல்கள் நடந்தேறிய ஆண்டு இது .அயல் நாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பண பிரச்சனையும் இன்று பெரிதாக உருவெடுத்துள்ளது.
நாடு எந்த பாதையில் பயணிக்கிறது என்ற நினைவே இல்லாமல் நாம் எல்லாம் ஏதோ ஒரு மூலையில் வியாபாரமக்கபட்டிருக்கும் கல்வியின் பிடியில் சிக்கி கொண்டு தவிக்கிறோம்,
நமது கல்வி திட்டம் மாணவர்களையும் இளைஞர்களையும் சிந்திக்க வைத்து விட கூடாது என்பது போன்று உருவாக்கபட்டிருக்கிறது, ஊடகங்களும் போட்டி போட்டு கொண்டு இந்த பணியை நேர்மையாக செய்து கொண்டிருக்கிறது.
ஆசிய போட்டிகளில் முதலிடம் பெற்ற சீனா 199 தங்க பதக்கங்கள் வாங்கி இருந்தது ஆனால் மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நாம் வாங்கியது என்னவோ வெறும் 14 தங்கங்கள் தான்.
நாம் எல்லோரும் பிரச்சனைகளின் வேர்களை காண முற்படுவதில்லை , நமது பள்ளிகளில் விளையாட்டு பாட வேளைகள் எல்லாம் வெறுப்பேற்றும் பாட வேளைகளாக மாற்றப்பட்டு விட்டன. விளையாட்டு துறைக்கு இங்கே முக்கியத்துவம் தரப்படுவது இல்லை நமக்கு தெரிந்தது என்னவோ வெறும் கிரிக்கெட் மட்டும் தான் .
நம் நாட்டில் அறிவாளிகள் இருக்கலாம் ஆனால் சிந்தனையாளர்கள் மிக குறைவு நமக்கு நமது நாட்டை பற்றியும் இந்த சமூகத்தை பற்றியும் சிந்திக்க நேரம் இருப்பதில்லை, நாம் சிந்தித்தால் மாற்றங்கள் நிகழும், "புரட்சிகர சிந்தனை தான் மாற்றங்களை உருவாக்கும்" என்றார் லெனின்.
தோழர்களே ! ! !
மாற்றங்கள் தான் ஒரு புதிய இந்தியாவை உருவாக்க முடியும்.
இந்த புத்தாண்டு புதிய மாற்றங்களை கொண்டு வரட்டும்.
எனது பயணங்கள் தொடரும்....