அத்தகைய நாளொன்றில்...
நீயும் நானும்
நிறுத்தாமல் பரிமாறிக்கொண்டோம்
பேரன்பை...
உன் குறைகளையும்
என் குறைகளையும்
மூட்டைக்கட்டி
அந்த ஆழ்கடலின் அலைமீது
வீசியெறிந்தோம்...
அது மூழ்குமோ மிதக்குமோ
எனக்கு கவலையில்லை
ஏன் தெரியுமா
என் கரமெனும் முத்தை
மூடிக்காக்கும் கதகதப்பான சிப்பியாய்
உன் கைககள் இருக்க
எனக்கு கவலையில்லை....
நீண்ட நாள் தனிமையின்
வலி போக்கியது
உன் ஆரத்தழுவல்.....
அணைத்தலின் சூட்டைத்தாண்டிய
பெருங்காதல் கண்டேன்
உன் நெஞ்சில் கை வைத்துப்பார்த்தேன்
பிரிவுத்துயரின் வலி
நான் இல்லாத நாட்களை
எப்படி கடந்திருப்பாய்.... ?
அணைத்து நடக்கவும்
ஆரத்தழுவவும்
கைகளை பற்றவும்
மடிமீது தூங்கவும்
என்ன செய்திருப்பாய் ?
ஆறாத ரணங்களும், தீராத வலிகளும்
கண்ணீராய் உருகும் தருணத்தில்
உலகின் அத்தனை அன்பையும்
உன் மீது நான் ஊற்றும் பொருட்டு
தோள் சாய்கிறேன் கண்ணம்மா
அள்ளி அணைத்துக் கொள்
படம்: கேமரா கண்கள்
கவிதை: முகநூல் பதிவர் ஒருவர் எழுதியது, சிறிய மாற்றங்களுடன்
கவிதை: முகநூல் பதிவர் ஒருவர் எழுதியது, சிறிய மாற்றங்களுடன்