உங்களை வரவேற்கிறேன் ..உங்களில் ஒருவனாக..

"விதைகள் விழுவதெல்லாம் பெருமரமாய் எழுவதற்கே"

Saturday, August 25, 2018

வாசிப்போம் #2

 What Can I Give?: Life lessons from My Teacher - Dr A.P.J. Abdul Kalam by Srijan Pal Singh

டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாமுடனான தனது அனுபவங்களை சிறுசிறு நிகழ்வுகளின் தொகுப்பாக எழுதியிருக்கிறார் ஸ்ரீஜன் பால் சிங். 2009 முதல் கலாமின் இறுதி நிமிடங்கள் வரை அவரது மாணவராகவும், உடன் பணியாளராகவும் இருந்தவர் இந்த ஸ்ரீஜன் பால் சிங். தனது வாழ்வின் இறுதி நிமிடங்கள் வரை அறிவுத் தேடலுடன் வாழ்ந்த ஒரு மனிதருக்கு, தனது உரைகளின் வழியே புதிய சிந்தனைகளையும், கனவுகளையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்த ஒரு மனிதருக்கு மிகப்பெரிய அஞ்சலியாக இந்த புத்தகத்தை எடுத்துக் கொள்ளலாம்.

வாசித்து முடிக்கும் போது கலாமின் கனவுகளையும், இந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு நாம் என்ன பங்களிக்க போகிறோம் என்ற கேள்வியையும் நமக்குள் விதைத்து விட்டு போகிறது இந்த புத்தகம்.
ஒரு நல்ல படைப்பின் நோக்கமும் அது தானே !

Buy at amazon