India After Gandhi by Ramachandra Guha
பல நூறு ஆண்டுகளாக சாதி, மத, இன மோதல்களால் துண்டாடப்பட்டு, காலனியாதிக்க சக்திகளால் சுரண்டப்பட்டு கிடந்த ஒரு பெரும் நிலப்பரப்பு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உருவெடுத்ததன் சுருக்கமான வரலாறு இது. இந்த வரலாற்றின் பக்கங்களில் ஏன் நாம் இந்தியாவை, அதன் பன்முகத்தன்மையை கொண்டாட வேண்டும் என்பதற்கான விடை இருக்கிறது. ராமசந்திர குஹா வாசகனின் கைபிடித்து சகபயணியாக கூடவே பயணிக்கிறார்.
இறுதியாக, இந்திய அரசியலமைப்புச் சட்டம் அதன் அடிப்படைக் கூறுகளை இழக்காத வரை, நியாயமான முறையில் தேர்தல்கள் நடக்கும் வரை, மதச்சார்பின்மை அரசின் கொள்கையாக இருக்கும் வரை, மிக முக்கியமாக, இந்திய மக்கள் தங்களுக்கு விருப்பமான மொழியை பேசவும், எழுதவும் பயன்படுத்தும் வரை, இந்தியா ஒரு ஜனநாயக நாடாக நிலைபெற்றிருக்கும் என்கிறார்.
இந்திய பன்முகத்தன்மைக்கு சவால்கள் எழுகின்ற இத்தகைய தருணங்களில் நாம் வாசிக்கவும், அடுத்த தலைமுறைக்கு இந்த தேசத்தின் சிறப்புகளை எடுத்துச் செல்லவும் கருவியாக பயன்படும் மிக முக்கியமான வரலாற்று ஆவணம் இந்த புத்தகம்.