உங்களை வரவேற்கிறேன் ..உங்களில் ஒருவனாக..

"விதைகள் விழுவதெல்லாம் பெருமரமாய் எழுவதற்கே"

Friday, November 16, 2018

ஒரு பியானோ கலைஞனின் கதை

The Pianist (2002 film)

இரண்டாம் உலகப்போரின் பின்னணியில் போலந்து நாட்டின் புகழ்பெற்ற பியானோ இசைக்கலைஞனான Szpilman னின் வாழ்க்கையை, போரின் கொடுந்துயரத்தினூடே வாழ்ந்திருத்தலுக்கான போராட்டத்தை, நம் கண்முன்னே விவரிக்கிறது திரைக்கதை.

நாஜிப்படைகள் நடத்திய இனப்படுகொலைகளின் சாட்சியமாக விளங்கும் இன்னொரு கலைப்படைப்பு இந்த திரைப்படம். அடுத்தடுத்த காட்சிகளின் மூலம் மனித மனதின் ஓரங்களில் படிந்திருக்கும் மனிதம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.



தன்னைச் சுற்றிலும் போரின் இனந்தெரியாத துயரங்கள் நிரம்பியிருக்க, தற்காலிக தீர்வாக உயிருக்கு பாதுகாப்பான ஓர் உறைவிடம் கிடைக்கிறது, தன் கண்முன்னே தான் உயிரென நேசிக்கும் பியானோ இருக்கிறது, உரத்த சத்தம் எழுப்பினால் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம் என்கிற நிலையில் பியானோ விசைகளின் மீது தன் விரல்கள் படாமல்  ஒரு கலைஞனாக, Szpilman  னாக நடித்திருக்கும் Adrian Brody இசையை உணரும் அந்த தருணம், அந்த காட்சி, சினிமாவின் பேரழகியல்.

இறுதியாக அந்த ஜெர்மானிய ராணுவ கேப்டனுக்கும், Szpilman க்கும் இடையிலான சந்திப்பும், நட்பும், நாமெல்லாம் கலைகளினூடே மானுட நலம் தேடும் மனிதர்கள் தான் என்று சொல்லி விட்டு போகிறது.

கேட்குமா மனிதர்களுக்கு?

பி.கு.: 2002ம் ஆண்டின் கேன்ஸ் திரைப்பட விருது, 3 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள், BAFTA விருதுகள் என பல்வேறு விருதுகளை வாங்கி குவித்திருக்கிறது. BBC யின் 21ம் நூற்றாண்டின் சிறந்த நூறு திரைப்படங்களின் பட்டியலிலும் இடம்பெற்றிருக்கிறது.

2 comments: