உங்களை வரவேற்கிறேன் ..உங்களில் ஒருவனாக..

"விதைகள் விழுவதெல்லாம் பெருமரமாய் எழுவதற்கே"

Sunday, June 14, 2020

ஜப்பானிய புத்தகங்கள் - வாசிப்பு அனுபவம் #1

ஜப்பான் சார்ந்து நான் இதுவரை வாசித்த இரண்டு புத்தகங்களுமே எழுத்தாளர்கள் தங்கள் சுய அனுபவங்களைப் பதிவு செய்யும் நினைவுக் குறிப்பு (Memoir) வகையைச் சார்ந்தவை.
முதல் புத்தகம் ஹருகி முராகமி தனது வாழ்க்கை அனுபவங்களைப் பற்றி எழுதிய What I talk about When I talk about Running.
.

முராகமி சமகாலத்திய ஜப்பானின்  மிகச்சிறந்த எழுத்தாளர். மரத்தான் போட்டிகளிலும், டிரையத்லான் போட்டிகளிலும் பங்கேற்றவர். உடல் உறுதியை மட்டுமன்றி மனஉறுதியையும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தும் இத்தகைய போட்டிகளுக்குத் தயாரான அனுபவங்களையும், பங்கேற்ற அனுபவங்களையும் சுவாரஸ்யமாக பதிவு செய்திருக்கிறார்.

ஒரு நாள் திறந்தவெளி அரங்கு ஒன்றில் பேஸ்பால் விளையாட்டைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்த போது தான் எழுத்தாளாராக வேண்டுமென்கிற எண்ணம் உருவானதாக குறிப்பிடுகிறார் முராகமி. தனது சுயத்தையும், ஆளுமையும் வடிவமைத்ததில் உடற்பயிற்சிக்கு முக்கியமான பங்குண்டு என்கிறார். தத்துவார்த்த ரீதியாக எழுத்துப்பணிக்கும், ஓடுதலுக்குமிடையே அவர் பின்னியிருக்கும் மெல்லிழையின் வழியே வாசகன் அவரது அனுபவங்களை உணரத் துவங்கி விடுகிறான்.   

வாழ்வின் நெருக்கடிகளிலிருந்து தப்பித்தலுக்கான ஒரு வழியாகவும், வாழ்ந்திருத்தலுக்கான பெரும் உந்துசக்தியாகவும் ஓடுதல் எப்போதுமிருக்கிறது என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது இந்த புத்தகம்.
எனக்கு எத்தனை வயதானாலும் சரி, நான் வாழும் காலம் வரை தொடர்ந்து என் சுயத்தைப் பற்றிய புதிய ஒன்றை கண்டுபிடித்துக் கொண்டே இருப்பேன் என்பதுதான் முராகமி தனது இந்த நினைவுக்குறிப்பின் வழியே விட்டுச் செல்லும் மிக முக்கியமான செய்தி.

வாசிப்போம் 


No comments:

Post a Comment