உங்களை வரவேற்கிறேன் ..உங்களில் ஒருவனாக..

"விதைகள் விழுவதெல்லாம் பெருமரமாய் எழுவதற்கே"

Tuesday, June 5, 2018

வாசிப்போம். #1



 வரலாறு பிடிக்குமா உங்களுக்கு?



பள்ளிப் பருவத்தில் நாம் படித்த வரலாற்று புத்தகங்கள் எல்லாம் அரசுகளின், அதிகார வர்க்கங்களின் வரலாறாகவே இருந்திருக்கிறது. அறிவியல் பார்வையில், மனிதகுல வரலாற்றை படிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆவல். அந்த வகையில் இணைய தேடலின் போது கண்ணில் பட்டது Yuval Noah Harari எழுதிய Sapiens - A Brief History of Humankind.

பொதுவாகவே வரலாற்று நூல்கள் நிகழ்வுகளின் தொகுப்புகளால் கட்டமைக்கப்பட்டிருக்கும், பேரரசுகள், சாம்ராஜ்யங்கள், போர்கள் இவற்றையே வரலாறாக படித்திருக்கிறோம். இந்த புத்தகம் ஒட்டுமொத்த மனித குல வரலாற்றை அறிவியல் பார்வையில் அணுகுவதோடு, எளிய எடுத்துக்காட்டுகள் மூலம் அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

மனிதகுல வளர்ச்சி என்பது சிந்தனைப் புரட்சி, விவசாய புரட்சி மற்றும் அறிவியல் புரட்சி போன்ற மூன்று பெரும் நிகழ்வுகளை உள்ளடக்கியது என்கிறார் ஹராரி. மதங்களும், கடவுள்களும், மனித உரிமைகளும் மனித மனதின் உருவாக்கங்கள் என்கிறார். முழு புத்தகத்தையும் வாசித்து முடிக்கும் போது  நீங்கள் இது வரைக்கும் கொண்டிருந்த பல நம்பிக்கைகள் கேள்விக்குள் ளாக்கப்படலாம். கேள்விகள் கேட்பதும், விடைகளை தேடுவதும், மாற்றங்களை ஏற்பதும் தானே அறிவியல்.

No comments:

Post a Comment