13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பின் (Big Bang) போது பருப்பொருள், ஆற்றல், நேரம், காலம் போன்றவை தோன்றின. நமது அண்டத்தின் இத்தகைய அடிப்படை அம்சங்களைப் பற்றி படிப்பதைத் தான் நாம் இயற்பியல் என்கிறோம்.
அண்டம் தோன்றி மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு பருப்பொருளும், ஆற்றலும் ஒன்றுதிரண்டு அணுக்களாயின, அணுக்கள் ஒன்றிணைந்து மூலக்கூறுகளாயின இதனைத் தான் நாம் வேதியியல் என்கிறோம்.
3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நமது பூமியில் சில மூலக்கூறுகள் ஒன்றிணைந்து உயிரினங்கள் தோன்றின, இந்த நிகழ்வினையும், உயிரினங்களின் இயக்கத்தையும் தான் உயிரியல் என்கிறோம்.
ஏறக்குறைய எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமா சாப்பியன்ஸ் எனும் உயிரினங்கள் கலாச்சாரம் என்னும் மிகப்பெரிய கட்டமைப்பை உருவாக்கத் தொடங்கின, காலச்சக்கரத்தில் கலாச்சார வளர்ச்சியின் தொகுப்பையே வரலாறு என்கிறோம். மனிதகுல வரலாற்றின் வழிநெடுகே மூன்று மிகப்பெரும் புரட்சிகள் நடந்தேறியிருக்கின்றன. எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சிந்தனைப் புரட்சி மனித மனதின் எல்லைகளை விரிவுபடுத்தியது. அதன் பின்னர் ஏற்பட்ட விவசாயப் புரட்சி உணவு தேடுவதில் இருந்த சிரமங்களைப் போக்கி, மனிதகுலம் கலாச்சார கட்டமைப்புகளை உருவாக்க வழிகோலியது. மூன்றாவதாக மிகச் சமீபத்தில் 500 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட அறிவியல் புரட்சி மனித குலம் மற்ற எல்லா உயிரினங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தி, இப்புவியை தனது தேவைக்கேற்றவாறு மாற்றியமைக்க உதவியிருக்கிறது. இந்த மூன்று பெரும் நிகழ்வுகளும் மனிதர்களிடமும், பிற உயிரினங்களிடமும் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதையே இந்த தொடரில் காணப் போகிறோம்.
வரலாறு வரையறுக்கப்படுவதற்கு முன்பே மனிதர்கள் பூமியில் வாழ்ந்திருக்கிறார்கள். நவீன கால மனிதர்களை ஒத்த விலங்குகள் இரண்டரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றின. ஆனால் பல நூற்றாண்டுகளாக அவற்றால் எண்ணற்ற வேறு உயிரினங்களின் மீது ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் நட்போடும், அதிகாரத்திற்காக சமர் புரிந்து கொண்டும் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கை முறை சிம்பன்சிகளைப் போலவும், யானைகளைப் போலவுமே இருந்திருக்கிறது. அவர்களுடைய சந்ததியினர் பிற்காலத்தில் நிலவில் கால் பதிப்பார்கள், அணுவின் ஆற்றலை கண்டறிவார்கள், மரபணுக் குறியீடுகளை அலசி ஆராய்வார்கள், வரலாற்று புத்தகங்களை எழுதுவார்கள் என்பதற்கான எந்த அறிகுறியும் அவர்களிடம் தென்படவேயில்லை. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் சுற்றுச்சூழலின் மீது எந்த எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தாதவர்களாகவே இருந்தார்கள்.
பரிணாம வளர்ச்சிப் பாதையில் நாம் இப்போது காணும் எல்லா உயிரினங்களுக்கும் பெரும்பாலும் தங்களுடைய மூதாதைய உயிரின பிரிவிலிருந்து தோன்றியவையே. உதாரணமாக நம் வீட்டில் வளரும் பூனையில் இருந்து சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் அனைத்தும் பெலிடே (Felidae) எனும் பூனைக் குடும்பத்தைச் சார்ந்தவை. அறிவியல் ஆராய்ச்சிகளின் முடிவில் பூனைக் குடும்பத்தில் இன்று நாம் காணும் விலங்குகள் அனைத்தும் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மூதாதய உயிரினத்திலிருந்து தோன்றியது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
மேற்கூறிய கோட்பாட்டின்படி ஹோமா சாப்பியன்ஸ் எனப்படும் நவீன மனிதர்களான நமக்கு மூதாதயர்களாக குரங்குகளைச் சொல்லலாம், சிம்பன்சிகள், கொரில்லாக்கள், உராங்குட்டான்கள் போன்றவை நம்முடைய நெருங்கிய உறவினர்கள்.
(1 பில்லியன் = 100 கோடி) (1 மில்லியன் = 10 இலட்சம்)
மனிதர்கள் எங்கே, எப்படி தோன்றினார்கள்?
மாறுபட்ட குணநலன்களுடன் ஒன்றுக்கு மேற்பட்ட மனித இனங்கள் இப்புவியில் வாழ்ந்தனவா?
பதில்கள்....அடுத்த பதிவில்..
Credits: Sapiens - A brief history of humankind by Yuval Noah Harari Buy at Amazon

Great Godwin. Keep going.
ReplyDeleteThank you madam ji
ReplyDelete