சாமி மரம்
***********
“அப்பா, அப்பா எந்திரிங்க, சாமி மரத்தை வெட்ட ஆள் வந்திருக்கு“ என்றபடி தனது அப்பாவை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தாள் இலக்கியா.
“அவரே நேத்து ஓவர்டைம் பாத்துட்டு லேட்டா வந்து படுத்துருக்காரு அவர ஏன்டி எழுப்பிட்டு இருக்க“ என்றபடி அறைக்குள் வந்தாள் இலக்கியாவின் அம்மா.
“சாமி மரத்த வெட்ட ஆள் வந்திருக்குமா அதான் அப்பாவ எழுப்பிட்டு இருக்கேன்“.
“நீயும், உன் சாமி மரமும் தான், அது என்ன நம்ம நிலத்துலயா நிக்குது நாம விருப்பபடி வளக்குறதுக்கு“ என சலிப்புடன் சொல்லி விட்டு தண்ணீர் பிடிக்க குடங்களுடன் வெளியே சென்றாள் அவள்.
இலக்கியாவுக்கு மனது கேட்கவில்லை, அப்பாவிடமிருந்து நகர்ந்து காலையிலேயே மொட்டை மாடியிலிருந்து படுதீவிரமாக ஸ்மாôட்போனில் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த அண்ணனிடம் ஓடினாள். “அண்ணா சாமி மரத்த வெட்ட ஆள் வந்திருக்கு பாத்தியா?“அவன் வேண்டா வெறுப்பாக மாடியிலிருந்து எட்டி பார்த்தான். அவர்கள் வீட்டிலிருந்து சுமார் நூறு மீட்டர் தொலைவில் நின்றிருந்தது அந்த மரம். அதனருகே மரம் அறுக்கும் இயந்திரங்களோடும், கயிறுகளோடும் ஐந்தாறு பேர் நின்று கொண்டிருந்தார்கள். “ஆமா அவங்க மரம் அவங்க வெட்றாங்க உனக்கென்ன வந்திச்சு?“ என்றபடி மறுபடியும் விளையாட்டில் ஆழ்ந்தான்.
இலக்கியாவுக்கு பத்து வயதாகிறது, அவளது சாமி மரத்தை வெட்ட போகிறார்கள் என்பதை தாங்கி கொள்ளவே முடியவில்லை. அந்த மரத்தடியில் எந்த சாமியுமில்லை, யாரும் அதை வழிபடவுமில்லை. இவளுக்கு மட்டும் அது எப்படி சாமி மரமானது?
மூன்று வருடங்களுக்கு முன்னால் அவர்களது சொந்த கிராமத்துக்கு கூட்டி சென்றிருந்தார் அவள் அப்பா. அங்கே ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து குலதெய்வம் கோயிலுக்கு சென்றார்கள். அங்கே கோவிலுக்கு பதிலாக பசுமையான ஒரு சிறு சோலை மட்டும் தானிருந்தது. விதவிதமான மரங்கள், செடிகள், கொடிகள், பறவைகள், ஊர்வன என அந்த உயிர்சூழலுக்கேற்ற அனைத்து உயிரினங்களும் செழித்து வாழும் சோலை அது. அந்த சோலைக்கு நடுவேயிருந்த ஒரு பெருமரத்தை தான் குலசாமி என தலைமுறை, தலைமுறையாக வணங்கி கொண்டிருந்தார்கள். நீண்டுயர்ந்து வளர்ந்திருந்த அந்த மரத்தை அண்ணாந்து பார்த்து விட்டு மனதில் எழுந்த பல கேள்விகளுடன் தன் பாட்டி தாயம்மாவிடம் ஓடினாள்.
“பாட்டி இதுதான் நம்ம குலசாமியா?“
“ஆமா செல்லம்“
“மரம் எப்படி பாட்டி குலசாமியா இருக்க முடியும்?, நாங்க இருக்கிற டவுன்ல கோயில்கள் இருக்கு, அதுக்குள்ள சாமிங்க இருக்கு, இங்க மட்டும் ஏன் இப்பிடி?“
அவளை அள்ளி அணைத்து மடியில் இருத்தி அவள் கேள்விகளுக்கு பதில் சொல்ல தொடங்கினாள் தாயம்மா.
“இது கிராமம் கண்ணு, இங்க இருக்குறவங்க செய்யுற முக்கியமான தொழில் விவசாயம், விவசாயம் நடக்கணும்னா என்ன எல்லாம் முக்கியம் சொல்லு?“
“நிலம், அப்புறம் தண்ணி“ என்றபடி உரையாடலில் ஒன்றிவிட்டிருந்தாள் இலக்கியா.
“ரெம்ப சரி, அதானல தான் இங்க இருக்குற இந்த சோலையும், உயிர் சூழலும், தாய் மரமும் நம்ம குலசாமி“.
தாயம்மா மேலும் பேசிக் கொண்டிருந்தாள், “இந்த தாய் மரத்துகிட்ட நாம மழை பெய்யணும்ன்னு வேண்டிகிட்டா இந்த மரம் வானத்துல மிதந்து வர்ற மேகங்கள் கிட்ட நம்ம வேண்டுதல சொல்லிடும், அதனாலயே இங்க வருசம் தவறாம நம்ம கிராமத்துல மழை பெய்யுது இது காலாகாலமா நம்மகிட்ட இருக்குற நம்பிக்கை.“
இலக்கியாவுக்கு ஆச்சரியம் விலகவே இல்லை. “மழை பெய்யும் சரி நிலத்தை எப்பிடி இந்த சாமி மரம் பாதுகாக்கும்?“
“தான் ஆழமா வேர்விட்டு நிக்குற இந்த நிலத்தோட தொப்புள் கொடி உறவு இருக்கு தாயி, இந்த உயிர்சூழல் இங்க இருக்குற வரைக்கும் நம்ம நிலம் செழிப்பா இருக்கும், மகசூலும் குறைவில்லாம கிடைக்கும்“ என்றபடி தாய் மரத்தை நோக்கி கையெடுத்து கும்பிட்டாள் பாட்டி.
இலக்கியாவுக்கு இன்னும் கேள்விகள் தீரவில்லை, “அப்போ நாங்க எங்க இருந்தாலும் எங்களோட வேண்டுதல சொல்ல இங்க வந்து தான் சாமி கும்பிடணுமா?“
“நீ இருக்குற இடத்தில நிக்குற எந்த மரத்துகிட்ட உன் வேண்டுதல சொன்னா போதும் அது நம்ம தாய் மரத்துகிட்ட வந்து சேந்துடும்“
***********
“அப்பா, அப்பா எந்திரிங்க, சாமி மரத்தை வெட்ட ஆள் வந்திருக்கு“ என்றபடி தனது அப்பாவை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தாள் இலக்கியா.
“அவரே நேத்து ஓவர்டைம் பாத்துட்டு லேட்டா வந்து படுத்துருக்காரு அவர ஏன்டி எழுப்பிட்டு இருக்க“ என்றபடி அறைக்குள் வந்தாள் இலக்கியாவின் அம்மா.
“சாமி மரத்த வெட்ட ஆள் வந்திருக்குமா அதான் அப்பாவ எழுப்பிட்டு இருக்கேன்“.
“நீயும், உன் சாமி மரமும் தான், அது என்ன நம்ம நிலத்துலயா நிக்குது நாம விருப்பபடி வளக்குறதுக்கு“ என சலிப்புடன் சொல்லி விட்டு தண்ணீர் பிடிக்க குடங்களுடன் வெளியே சென்றாள் அவள்.
இலக்கியாவுக்கு மனது கேட்கவில்லை, அப்பாவிடமிருந்து நகர்ந்து காலையிலேயே மொட்டை மாடியிலிருந்து படுதீவிரமாக ஸ்மாôட்போனில் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த அண்ணனிடம் ஓடினாள். “அண்ணா சாமி மரத்த வெட்ட ஆள் வந்திருக்கு பாத்தியா?“அவன் வேண்டா வெறுப்பாக மாடியிலிருந்து எட்டி பார்த்தான். அவர்கள் வீட்டிலிருந்து சுமார் நூறு மீட்டர் தொலைவில் நின்றிருந்தது அந்த மரம். அதனருகே மரம் அறுக்கும் இயந்திரங்களோடும், கயிறுகளோடும் ஐந்தாறு பேர் நின்று கொண்டிருந்தார்கள். “ஆமா அவங்க மரம் அவங்க வெட்றாங்க உனக்கென்ன வந்திச்சு?“ என்றபடி மறுபடியும் விளையாட்டில் ஆழ்ந்தான்.
![]() |
படம்: சித்தரிப்புக்காக மட்டும் (from my archives) |
மூன்று வருடங்களுக்கு முன்னால் அவர்களது சொந்த கிராமத்துக்கு கூட்டி சென்றிருந்தார் அவள் அப்பா. அங்கே ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து குலதெய்வம் கோயிலுக்கு சென்றார்கள். அங்கே கோவிலுக்கு பதிலாக பசுமையான ஒரு சிறு சோலை மட்டும் தானிருந்தது. விதவிதமான மரங்கள், செடிகள், கொடிகள், பறவைகள், ஊர்வன என அந்த உயிர்சூழலுக்கேற்ற அனைத்து உயிரினங்களும் செழித்து வாழும் சோலை அது. அந்த சோலைக்கு நடுவேயிருந்த ஒரு பெருமரத்தை தான் குலசாமி என தலைமுறை, தலைமுறையாக வணங்கி கொண்டிருந்தார்கள். நீண்டுயர்ந்து வளர்ந்திருந்த அந்த மரத்தை அண்ணாந்து பார்த்து விட்டு மனதில் எழுந்த பல கேள்விகளுடன் தன் பாட்டி தாயம்மாவிடம் ஓடினாள்.
“பாட்டி இதுதான் நம்ம குலசாமியா?“
“ஆமா செல்லம்“
“மரம் எப்படி பாட்டி குலசாமியா இருக்க முடியும்?, நாங்க இருக்கிற டவுன்ல கோயில்கள் இருக்கு, அதுக்குள்ள சாமிங்க இருக்கு, இங்க மட்டும் ஏன் இப்பிடி?“
அவளை அள்ளி அணைத்து மடியில் இருத்தி அவள் கேள்விகளுக்கு பதில் சொல்ல தொடங்கினாள் தாயம்மா.
“இது கிராமம் கண்ணு, இங்க இருக்குறவங்க செய்யுற முக்கியமான தொழில் விவசாயம், விவசாயம் நடக்கணும்னா என்ன எல்லாம் முக்கியம் சொல்லு?“
“நிலம், அப்புறம் தண்ணி“ என்றபடி உரையாடலில் ஒன்றிவிட்டிருந்தாள் இலக்கியா.
“ரெம்ப சரி, அதானல தான் இங்க இருக்குற இந்த சோலையும், உயிர் சூழலும், தாய் மரமும் நம்ம குலசாமி“.
தாயம்மா மேலும் பேசிக் கொண்டிருந்தாள், “இந்த தாய் மரத்துகிட்ட நாம மழை பெய்யணும்ன்னு வேண்டிகிட்டா இந்த மரம் வானத்துல மிதந்து வர்ற மேகங்கள் கிட்ட நம்ம வேண்டுதல சொல்லிடும், அதனாலயே இங்க வருசம் தவறாம நம்ம கிராமத்துல மழை பெய்யுது இது காலாகாலமா நம்மகிட்ட இருக்குற நம்பிக்கை.“
இலக்கியாவுக்கு ஆச்சரியம் விலகவே இல்லை. “மழை பெய்யும் சரி நிலத்தை எப்பிடி இந்த சாமி மரம் பாதுகாக்கும்?“
“தான் ஆழமா வேர்விட்டு நிக்குற இந்த நிலத்தோட தொப்புள் கொடி உறவு இருக்கு தாயி, இந்த உயிர்சூழல் இங்க இருக்குற வரைக்கும் நம்ம நிலம் செழிப்பா இருக்கும், மகசூலும் குறைவில்லாம கிடைக்கும்“ என்றபடி தாய் மரத்தை நோக்கி கையெடுத்து கும்பிட்டாள் பாட்டி.
இலக்கியாவுக்கு இன்னும் கேள்விகள் தீரவில்லை, “அப்போ நாங்க எங்க இருந்தாலும் எங்களோட வேண்டுதல சொல்ல இங்க வந்து தான் சாமி கும்பிடணுமா?“
“நீ இருக்குற இடத்தில நிக்குற எந்த மரத்துகிட்ட உன் வேண்டுதல சொன்னா போதும் அது நம்ம தாய் மரத்துகிட்ட வந்து சேந்துடும்“
“அது எப்பிடி பாட்டி?“
“காத்து அடிக்குதில்ல கண்ணு அந்த காத்து வழியா மரங்கள் ஒண்ணோட ஒண்ணு பேசிக்குது“
“மரங்கள் பேசுமா பாட்டி?“ விழிகள் விரிய கேட்டாள் இலக்கியா
“பேசும் கண்ணு“ என்றபடி அவளை உச்சி முகர்ந்து முத்தமிட்டாள் பாட்டி.
தனக்கு ஏழு வயதாயிருந்த போது நிகழ்ந்த இந்த நிகழ்வு தான் அவளது வீட்டிற்கு அருகில் நின்றிருந்த அந்த மரத்தை சாமி மரமாக்கி இருந்தது. கூடவே பள்ளியில் கற்ற பாடங்களும் மரங்களின் சிறப்பை அவளுக்கு உணர்த்தியிருந்தன.
அன்று முழுவதும் மரமறுக்கும் இயந்திரத்தின் ஓசை கேட்டுக் கொண்டே இருந்தது. மாலையில் அவள் அண்ணன் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தான் “அந்த மரம் நின்ன இடத்துல நாலு மாடி மால் வருதாம்பா, இரண்டு, மூணு தியேட்டர், கேம் சென்டர் எல்லாம் திறக்க போறாங்களாம்.“
அவன் சொன்னது இலக்கியாவிற்கும் கேட்டது.
மரங்கள் பேசும், மால்கள் பேசுமா? என்று யோசித்தபடி அப்பா வாங்கி வந்திருந்த வேப்பமரக்கன்றை நடுவதற்காக குழி தோண்டிக் கொண்டிருந்தாள் இலக்கியா.
சாமி மரம் அழகான அருமையான படைப்பு... இயற்கையையும் மரங்களையும் நேசிக்கும் ஒரு ஆன்மாவின் குரல்... இது கதையல்ல நிஜம்.... மரங்கள் பேசும்... காற்று வழி கதைக்கும்... மேகங்கள் கேட்கும் காற்று வழி பேசும்.... இது அறிவியல்.... இயற்கை, உயிர்ச் சூழல், பிரபஞ்சம் இவை அனைத்தும் உறவுகளின் தொகுப்பே.... அன்பு உணர்வுகளின் கூட்டாளிகள்.... இலக்கியா, பாட்டி, மரம் அருமையான கதாபாத்திரங்கள்... அறிவியலும் ஆன்மீகமும் அழகாக கரம் கோர்க்கின்றன... வேப்பமரக்கன்றை நடும் இலக்கியா நேர்மறை சிந்தனை விதை.... பெண் குழந்தை மாற்றத்தின் கருவி...... ஆயிரம் பாராட்டுகள்... தொடர்ந்து எழுதுங்கள்... வாசிக்க ரசிக்க ருசிக்க நாங்கள் இருக்கிறோம்....
ReplyDeleteநன்றிகள் :-)
DeleteLoved the way the story ended, on a positive note..planting a new sapling :)
ReplyDeleteYep. A ray of Hope :)
Deleteஅருமை..
ReplyDeleteSuper da..beautiful one.. refreshing.. story itself has a life.. மரங்கள் பேசும்.. மால்கள்??
Thanks machi :)
Delete